சதுரகிரி மலைக்கோவிலில் இரவில் தங்க அனுமதியில்லை; பக்தர்கள் ஏமாற்றம்
ADDED :760 days ago
மதுரை; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும், இரவில் நவராத்திரி பூஜையில் பங்கேற்க வனத்துறை அனுமதிக்க கோரி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் கோயிலில் 3 நாள் தங்கி விழா நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதில்லை; காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவில் தங்கி தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.