ஸ்ரீபெரும்புதுாரில் எதிராஜ நாதவில்லி தாயார் ஊஞ்சல் உற்சவம்
ADDED :760 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், எதிராஜ நாதவல்லி தாயார் நவராத்திரி ஊஞ்சல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு எதிராஜ நாதவல்லி தாயார் நவராத்திரி ஊஞ்சல் உற்சவம் விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நான்காம் நாளான நேற்று, மாலை 3:00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் யஜுர்வேத பாராயணம், 6:30 மணிக்கு உள்புறப்பாடும், 7:00 மணிக்கு ஊஞ்சள் சேவையும், இன்னிசை நிகழ்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.