அம்மா.. முத்தாரம்மா.. ; சங்கனூர் தசரா விழாவில் பக்தர்கள் பரவசம்
ADDED :760 days ago
கோவை; கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில், தசராவையொட்டிவேடமணிந்து வந்த பக்தர்கள் பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை சங்கனூரில், நல்லாம்பாளையம், அன்னியப்பன் வீதியில் ஞானமூர்த்தீஸ்வரர் – முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை போலவே இங்கும் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து பக்தர்கள் முத்தாரம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகம் செய்துள்ளது.