உலக நன்மை வேண்டி சத சண்டி மகா ஹோமம்
ADDED :761 days ago
புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் சாரதா நவராத்திரியை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, 4ம் ஆண்டு சத சண்டி மகா ஹோமம் கடந்த 15ம் தேதி, இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளியில் துவங்கியது.
நேற்று அம்பாள் சந்திரகண்டா அலங்காரத்தில் அருள் பாலித்தார். காலை 8:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜையுடன் ஹோமம் துவங்கியது. தேவி மகாத்மியத்தின் 13 அத்தியாயங்கள் பாராயணம் செய்து, 9 சுவாஸினிகள், கன்யா, வடு, தம்பதி ஆகியோர் பூஜிக்கப்பட்டனர். மதியம் 1.15 மணிக்கு மகா பூர்ணஹூதி, தீபாராதனை நடந்தது. மாலையில் லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம், தீபாராதனை, டாக்டர் சங்கரதேவியின் ஆன்மிக உரை நிகழ்ச்சி நடந்தது.