உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்பட்டி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

நாகம்பட்டி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

வேடசந்தூர்: வேடசந்தூர் நாகம்பட்டி ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில், ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி விழா கொண்டாட்டம் நடந்தது. இன்று காலை 4:30 மணி அளவில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் துவங்கிய விழாவில், சக்தி கிணற்றுக்குள் எழுந்தருளல், சக்தி தேங்காய் உடைத்தல், அம்பு போடுதல், குடகனாற்றுக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்தல், அம்மன் ஆலயம் திரும்புதல், மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு மேல் ஆலயம் முன்பு பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பான அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !