உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி வீடுகளில் முருகன் கொடி கட்டி பிரார்த்தனை

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி வீடுகளில் முருகன் கொடி கட்டி பிரார்த்தனை

மதுரை; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோர,  திருப்பரங்குன்றம், நகர் பகுதிகளில் பெண்கள் வீடுகளில் முருகன் கொடி கட்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரிய உரிமை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தீப தூணில் தீபம் ஏற்ற அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், திருப்பரங்குன்றம் பாம்பன் நகர், கருமாரியம்மன் கோவில் தெரு, சக்தி விநாயகர் கோவில் தெரு, பாலாஜி தெரு, வெள்ளி மலை தெரு, ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் தங்களது வீடுகளின்முன்பு முருக்கப்பெருமானின் படத்துடன் கூடிய சேவற் கொடியை கட்டி, விளக்குகளில் தீபம் ஏற்றி கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். விவேகா ஸ்ரீ: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தான் 90 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்துள்ளது. அங்கே இருப்பது தீப தூண்தான். சிலர் கூறுவது போல சர்வே கல் அல்ல. சர்வே கல் என்பது ஆறடி உயரத்திற்கா இருக்கும். அரசியல் காரணங்களுக்காக இது போன்று தவறான தகவல்களை தெரிவிப்பது தமிழர்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நீதிமன்றம் அனுமதி கிடைக்கும் அரசால் தீபம் ஏற்ற விடவில்லை. இது மிகுந்த வேதனை. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து வீடுகளில் முருகப்பெருமானின் கொடி கட்டி வாசலில் கோலமிட்டு தீபம் ஏற்றி வேண்டுதல் வைத்து வருகிறோம் என்றார்.


நித்யா: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தமிழர்களின் கலாச்சாரம். இதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அங்கே இருப்பது தீபத்தூண் தான் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இதை அறியாமல் பல தற்குறிகள் அவர்கள் மனதிற்கு வந்தது போல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வேண்டிக்கொண்டு தினமும் வீட்டு வாசலில் விளக்கேற்றி கூட்டு பிரார்த்தனையும் செய்து வருகிறோம். எங்களது வேண்டுதலை முருகப்பெருமான் விரைவில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை எங்களுக்கு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !