உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை

அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது. முன்னதாக மூலவருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் நெய் தீபம் ஏற்றியும், மாவிலக்கு எடுத்தும், வழிபாடு செய்தனர். மகளிர் மன்ற குழுவினர் சார்பில் 108 குங்கும அர்ச்சனை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று மாங்கல்ய பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !