உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு!

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், தொல்லியல் துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கல்வெட்டுக்கள் குறித்தும், பழமையை பாதுகாக்கும் நோக்கத்திலும், தொல்லியல் துறை சார்பில், அது தொடர்பான புத்தகம் வெளியிடப்படவுள்ளது. மிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை பிரதி எடுக்கும் பணியில், தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.தொல்லியல் துறை ஆணையாளர் வசந்தாவின் உத்தரவின்பபடி, தொல்லியல் துறை அதிகாரி ஜோதி தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு, நேற்று, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தனர். கோவிலில் இருந்த, பத்து கல்வெட்டுக்கள் நகல் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, கோட்டை பெருமாள் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில், அக்டோபர், 19 ம் தேதி வரை, கல்வெட்டு நகல் எடுக்கும் பணி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !