காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் இரவு சூரசம்ஹாரம்!
காஞ்சிபுரம்: காமாட்சியம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக துவங்கியது. நேற்று காலை 6:00 மணியிலிருந்து 8:00 மணி வரை, யாக சாலை ஹோமம் நடந்தது.காலை 11:00 மணியிலிருந்து பகல் 1:30 மணி வரை, நவாவரண பூஜை நடந்தது. அத்துடன் கன்யா பூஜை, சுமங்கலி பூஜைகளும் நடந்தன. இரவு ரிஷி முகத்துடன் வந்த சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூர சம்ஹாரத்திற்கு பிறகு, கொலு மண்டபத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மனை பக்தர்கள் வழிபட்டனர். இசை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன.இன்று காலை, மாலை 6:30 மணிக்கு பஞ்சதசீ மூலமந்திரத்துடன் ஹோமம் நடைபெறும். காலை 10:30 மணிக்கு ஸ்ரீசக்ரத்திற்கு பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து நவாவரணம் பூஜை நடக்கும். இரவு 7:00 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளி, சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.