/
கோயில்கள் செய்திகள் / 1038வது சதய விழா; மாமன்னன் ராஜராஜ சோழன் மீட்ட பன்னிரு திருமுறை நூல்கள் யானை மீது ஊர்வலம்
1038வது சதய விழா; மாமன்னன் ராஜராஜ சோழன் மீட்ட பன்னிரு திருமுறை நூல்கள் யானை மீது ஊர்வலம்
ADDED :761 days ago
தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன், முடி சூட்டிய நாளை அவன் பிறந்த நட்சத்திரமாகிய ஐப்பசி சதய நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா நேற்று, (24ம் தேதி), காலை மங்கல இசையுடன் துவங்கியது.தொடர்ந்து திருமுறை பாடல்கள், கருத்தரங்கம், 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.