குலசை., முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு; பெண்கள் வழிபாடு
ADDED :711 days ago
உடன்குடி: குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஜப்பசி மாத பவுர்ணமி திருவிளக்கு பூஜையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 8 மணிக்கு காலசந்தி பூஜைநடந்தது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான தீபாராதனையும் நடந்து. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.