சந்திரோதய கவுரி பூஜை; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1031 days ago
கோவை ; நேரு ஸ்டேடியம் அருகே உள்ள ஆடிஸ் வீதி கருமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் சந்திரோதய கவுரி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோயிலில் வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன், அம்மனை தரிசனம் செய்தனர்.