உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்; ஆதீனங்கள் பங்கேற்பு

சித்தி விநாயகர் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்; ஆதீனங்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் முதல்கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம் பங்கேற்றனர்.

மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் உள்ளது.  இந்த கோவில் புனரமைக்கப்பட்டு நாளை  ஸ்ரீ மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று இரவு  காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை  பூஜைகள் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பூரணாஹூதி, வேதபாராயணம் திருமுறை பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !