உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண விழா துவக்கம்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண விழா துவக்கம்

தென்காசி; தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழாநேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தென்காசி நகரில் பிரசித்தி பெற்ற உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 5.10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரம், சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. நவ.7ம்தேதி தேரோட்டம், 9ம்தேதி காலை 8.20 மணிக்கு யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தவசுக்கு எழுந்தருளலும், மாலை தெற்கு மாசிவீதியில் காசிவிஸ்வநாதர், உலகம்மன் தவசுக்காட்சியும், இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் தினந்தோறும் காலை, இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, மாலையில் மண்டகபடி தாரர்களின் சமயசொற்பொழிவு, மண்டகபடி தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !