உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோயிலில் வடிகால் மூடி உடைந்து கோவை பெண் பக்தர் படுகாயம்

திருச்செந்துார் கோயிலில் வடிகால் மூடி உடைந்து கோவை பெண் பக்தர் படுகாயம்

திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரூ.200 கோடியில், பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வடக்கு வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம்.
கோவை, டி.வி.எஸ்.நகரைச் சேர்ந்த நவபாலன் மனைவி வேலன்டினா (58). நேற்று காலை சுப்பிரமணிய கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர், தனது செருப்பை வடக்கு வாசல் அருகில் வடிகால் மேல் பகுதியில் கழற்றி விட்டு சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் சென்றுள்ளார். சுவாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து செருப்பை வேலன்டினா எடுக்க முயன்றார். அப்போது வடிகால் சிமெண்ட் மூடி உடைந்தது. இதனால் வேலண்டினா வடிகாலில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பக்தர்கள் அவரை மீட்டு திருச்செந்துார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருச்செந்துார் கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !