உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை தசரா பக்தர்கள் வேடமணிந்து விரதம் துவக்கம்

குலசை தசரா பக்தர்கள் வேடமணிந்து விரதம் துவக்கம்

தூத்துக்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வேடமணிந்து காணிக்கை பிரிக்க துவங்கினர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உலக அளவில் பெயர் பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா இங்கு அதிவிமர்சையாக நடைபெற்றுவருகிறது. வேண்டுதல்கள் நிறைவேற முத்தாரம்மனை வேண்டி பல்வேறு வேடமணிந்து காணிக்கை பிரித்து பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்திவருகின்றனர். இதனால் தசரா திருவிழா முடியும் வரை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முத்தாரம்மன் பக்தர்களே காட்சியளிப்பர். இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் குலசை தசரா பக்தர்கள் வேடமணிந்து காணிக்கை பிரிக்க துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !