சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1049 days ago
புதுச்சேரி: புதுச்சேரி, புதுசாரம் நடுத்தெருவில் சித்தி புத்தி விஜய கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் 46ம் ஆண்டு விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம், சமபந்தி போஜன நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஊஞ்சலில் அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.