குறுக்குத்துறை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா 13ம் தேதி துவக்கம்
ADDED :739 days ago
திருநெல்வேலி; நெல்லை, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா 13ம் தேதி துவங்குகிறது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா 13ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி 6 நாட்கள் நடக்கிறது. தினமும் யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் 18ம் தேதி மாலை4 மணிக்கு மேல் நடக்கிறது. கோயிலில் பாலாலயம் செய்து தற்போது திருப்பணி நடப்பதால் சம்ஹாரம், கோயில் மண்டப வாசல் முன் நடக்கும். 19ம் தேதி இரவு 7 மணிக்கு கோயிலில் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.