உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசித்தி பெற்ற கல்பாத்தி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பிரசித்தி பெற்ற கல்பாத்தி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பாலக்காடு: பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழாவின் துவக்கமாக இன்று காலை 7.30 மணியளவில், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வேத பாராயணம் ஆகியவை நடந்தது. 10.15 மணி அளவில் கோவில் மேல்சாந்தி பிரபு சேனாபதியின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதே நேரத்தில் விழா நடக்கும் உப கோவில்களான மந்தகரை மகா கணபதி, கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி ஆகிய கோவில்களிலும் பக்தர்களின் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. தேர் திருவிழாவையொட்டி நடக்கும் ஐந்து நாள் சங்கீத உற்சவம் நாளை (9ம் தேதி) மாலை 6 மணிக்கு சாத்தபுரம் மணி அய்யர் சாலையில் அமைத்துள்ள மேடையில் எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில் தலைமையில், மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி துவக்கி வைக்கிறார். வரும் 14, 15, 16 தேதிகளில், தேரோட்டம் நடத்தப்படுகிறது, திருவிழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ரத சங்கமம் 16ம் தேதி மாலை நடக்கும். அன்று பாலக்காடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து பாலக்காடு மாவட்ட கலெக்டர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !