உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகண்ட், பத்ரிநாத் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு

உத்தரகண்ட், பத்ரிநாத் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு

உத்தரகண்ட்; பத்ரிநாத் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு வழிபாடு செய்தார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக உத்தரகண்ட் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை பத்ரிநாத் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். சுவாமி வழிபாடு செய்து வெளியே வந்து அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அவருடன் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் உத்தரகாண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு) ஆகியோரும் சென்றனர். டேராடூன் விமான நிலையத்திலிருந்து கர்வால் மற்றும் குமாவோன் வரை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !