சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா
ADDED :693 days ago
சூலூர்: பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது.
சூலூர் அடுத்த பொன்னாண்டாம் பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. மாலை அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு விரதத்தை துவக்கினர். நேற்று காலை நடந்த அபிஷேக அலங்கார பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 18 ம்தேதி மாலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 திரவியங்களால் மகா அபிஷேகம் நடக்கிறது. 19 ம்தேதி காலை,9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன.