உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப பக்தர்களுக்காக தினமும் ஒரு சாஸ்தா; இன்று தாமரை மலர் ஏந்திய சாஸ்தா!

ஐயப்ப பக்தர்களுக்காக தினமும் ஒரு சாஸ்தா; இன்று தாமரை மலர் ஏந்திய சாஸ்தா!

தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் பற்றிய தகவல் இப்பகுதியில் இடம் பெறுகிறது.

தாமரை மலர் ஏந்திய சாஸ்தா; சங்குகர்ணன் என்னும் அசுரன் சம்பகாரண்யம் என்னும் இத்தலத்தில் தவம்புரிந்த முனிவர்களை எல்லாம் துன்புறுத்தினான். இதில் இருந்து விடுபட ‘உக்ர தபஸ்’ என்னும் முனிவர் தியானத்தில் அமர்ந்து சாஸ்தாவின் மூலமந்திரத்தை ஜபித்தார். முனிவருக்கு காட்சியளித்ததோடு அசுரனை அழித்து இங்கு சாஸ்தா குடிகொண்டார். எப்போதும் கையில் தாமரை ஏந்தியிருக்கும் இவர் ‘நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா’ என அழைக்கப்படுகிறார். சாஸ்தா என்பதற்கு கட்டளையிடுபவர், குற்றம் புரிந்தோரை தண்டிப்பவர், குருநாதர், காவல் தெய்வம் என பல பொருள் உள்ளன. இத்தலத்தில் பூரணை, புஷ்கலாவுடன் இருக்கிறார். பழமையான இக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது.


திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
நேரம்: காலை 8:00 – 11:30 – மாலை 5:30 – 7:30 மணி
தொடர்புக்கு: 99441 69803, 98948 36222


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !