சபரிமலை 18 படியேறிய முதல் இருமுடி; சபரீசனை நோக்கி பயணம்
ADDED :751 days ago
சபரிமலை ; சபரிமலை, மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறந்து நெய்யபிஷேகத்துடன் மண்டல காலம் தொடங்கியது. தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில், புதிய மேல்சாந்தி புத்திலத் மண. மகேஷ் நம்பூதிரி நடையை திறந்தார். இந்த மண்டகாலத்தில், சபரிமலை 18 படியில் படியேறிய முதல் இருமுடியாக, மேல்சாந்திகள் இருமுடி உள்ளது. மேல்சாந்திகள் தங்கள் இருமுடியுடன் 18 படியேறினர். தொடர்ந்து பக்தர்கள் சரணகோஷத்தடன் சபரீசனை நோக்கி தனது பயணத்தை துவங்கினர்.