சிம்ம வாகனத்தில் உலா வந்த அண்ணாமலையார்; பக்தர்கள் பரவசம்
ADDED :1054 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாள் இரவு உற்சவத்தில், சிம்ம வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.