உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு சாஸ்தா; இன்று.. அஷ்ட சாஸ்தா

தினமும் ஒரு சாஸ்தா; இன்று.. அஷ்ட சாஸ்தா

கார்த்திகை 1 முதல் ஐயப்ப பக்தர்கள் தரிசிக்கும் விதத்தில் ஐயப்பன்(சாஸ்தா) கோயில்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

சிவபெருமானுக்கும், மோகினிக்கும் மகனாக அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரை பாண்டிய மன்னரான ராஜசேகரனும், பந்தள ராணியும் பூலோகத்தில் வளர்த்தனர். கேரளத்தில் பிரம்மச்சாரியாக தனித்தும், தமிழகத்தில் பூரணா, புஷ்கலாவுடன் இணைத்தும் இவர் வழிபடப்படுகிறார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு என்னுமிடத்தில் அஷ்ட சாஸ்தாவாக எட்டு வடிவங்களில்  அருள்பாலிக்கிறார். இவர்களை வழிபட்டால் கீழ்க்கண்ட வரங்கள் கிடைக்கும். 


ஞானசாஸ்தா –   கல்வி  
கல்யாண வரதர் –  திருமணம்  
காலசாஸ்தா  – எமபயம் தீரும்
ஆதிசாஸ்தா – மழை  
சந்தான ப்ராப்தி சாஸ்தா – குழந்தை  
வேதசாஸ்தா – வேத ஞானம்
வீரசாஸ்தா –  வெற்றி
சம்மோஹன சாஸ்தா –  சவுபாக்கியம்

திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் 12 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00 மாலை 5:00 – 8:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !