உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவ வடிவில் சங்குகள் அடுக்கப்பட்டு 1008 சங்காபிஷேகம் கோலாகலம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவ வடிவில் சங்குகள் அடுக்கப்பட்டு 1008 சங்காபிஷேகம் கோலாகலம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைகாக 1008 சங்கபிஷேகம் நடந்தது.

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று, உலக நன்மைகாக 1008 சங்காபிஷேகம் நடந்தது. சிவ லிங்க வடிவில் சங்குகள் அடுக்கப்பட்டு நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !