சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல அனுமதி
ADDED :702 days ago
சபரிமலை; சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பல்வேறு வழிகளில் பக்தர்கள் சென்று வருகின்றனர். தற்போது விமானத்தில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகாமாக உள்ளது. இந்நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் எடுத்து செல்லலாம் என அறிவுறுத்தியுள்ளது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.