உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பஞ்சரத தேரோட்டம் துவங்கியது; முதலாவதாக விநாயகர் வடம் பிடிப்பு

திருவண்ணாமலையில் பஞ்சரத தேரோட்டம் துவங்கியது; முதலாவதாக விநாயகர் வடம் பிடிப்பு

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீப விழா, ஏழாம் நாள் தேர் திருவிழாவில் முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பஞ்சரத தேரோட்டம் துவங்கியது. முதலில் விநாயகர் தேரை மாட வீதிகளில் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகன் தேரோட்டம் தொடங்கி நடக்க உள்ளது. விழாவில் பக்தர்கள் குழந்தையுடன் கரும்புத் தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !