உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு புற்று நாக சிவசக்தி அம்மன் கோயில் திருவிழா

சுயம்பு புற்று நாக சிவசக்தி அம்மன் கோயில் திருவிழா

காரியாபட்டி: காரியாபட்டி கணக்கனேந்தல் சுயம்பு புற்று நாக சிவசக்தி அம்மன் கோயில் 5வது ஆண்டு ஆன்மீக திருவிழா நடந்தது. செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. 6 அடி முதல் 12 அடி வரை அலகு குத்தி பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பக்தர்கள் கொண்டு வந்த பால், நாகம்மாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதுரை தேனூர் ஜெய் வராகி சக்தி சித்தர் பீடம் சித்தர் மகரிஷி சுவாமிகள், நாக சித்தர் லட்சுமண சுவாமிகள் முன்னிலையில் நாகம்மாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !