ஒண்டிமலையில் கார்த்திகை மகாதீபம்; வானில் வட்டமிட்ட கருடன்
ADDED :693 days ago
கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே வேலாயுதபுரம் ஒண்டிமலை ஸ்ரீ சன்னாசியப்பன் கோயில் திருக்கார்த்திகை விழா நடந்தது. இப்பகுதியின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் பொங்கலிட்டு பூஜைகள் செய்து வழிபட்டனர். மலை உச்சியில் மகாதீபம் ஏற்றி சரண கோஷமிட்டு சுவாமியை வழிபட்டனர். மகாதீபம் ஏற்றியபோது வானில் வட்டமிட்ட கருடனை சன்னாசியப்பன் சுவாமியே காட்சி தந்ததாக பக்தர்கள் பரவசத்துடன் வணங்கினர்.