/
கோயில்கள் செய்திகள் / தீப ஒளியில் மிளிர்ந்த சபரிமலை; தங்கமாய் ஜொலித்த சுவாமி ஐயப்பன்.. விண்னை தொட்ட சரணம் கோஷம்!
தீப ஒளியில் மிளிர்ந்த சபரிமலை; தங்கமாய் ஜொலித்த சுவாமி ஐயப்பன்.. விண்னை தொட்ட சரணம் கோஷம்!
ADDED :1072 days ago
சபரிமலை: கார்த்திகை தீப விழாவையொட்டி சபரிமலையில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் கார்த்திகை விழா கொண்டாடப்பட்ட நிலையில் கேரளாவில் நேற்று இந்த விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சபரிமலையில் மாலை தீபாராதனைக்கு பின்னர் தந்திரி மகேஷ் மோகனரரு ஸ்ரீ கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட விளக்குகளில் தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி மற்றும் பூஜாரிகளும் தேவசம் ஊழியர்களும் விளக்கேற்றினர். பின்னர் 18 படி பக்கங்களில் உள்ள அடுக்கு விளக்கிலும் கோயிலை சுற்றியுள்ள மதில் சுவர்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு கோயில் மணி ஒலிக்கப்பட்டது. தங்கமாய் ஜொலித்த சுவாமி ஐயப்பனை, சுவாமியே சரணம் ஐயப்பா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.