முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1037 days ago
பட்டிவீரன்பட்டி: வத்தலக்குண்டு அருகே எஸ்.தும்மலப்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து தேவராட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க புனித நீர் கடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர விமானங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக யாகசாலை பூஜையை கந்தப்ப ஆதினம் திருநாவுக்கரசு, சோமசுந்தரம் குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.