உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி; விநாயகருக்கு சிறப்பு பூஜை

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி; விநாயகருக்கு சிறப்பு பூஜை

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் கார்த்திகை மாத சங்கடஹர சதூர்த்தி பூஜைகள் நடந்தது. இதில் விநாயக பெருமானுக்கு அருகம்புல்.மல்லிகை, ரோஜா, போன்ற மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயில் உள் பிரகாரத்தில் இருக்கும் விநாயகர் சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைப்போலவே கோபால்பட்டி காளியம்மன் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட விநாயகர் கோயில்களில் சங்கடகர சதுர்த்தி பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !