காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம்
ADDED :783 days ago
சூலூர்; காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம் நேற்று நடந்தது.
சூலூர் அடுத்த காங்கயம் பாளையத்தில் உள்ள ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு மண்டல மகர விளக்கு பூஜை, நவ., 17 ம்தேதி துவங்கியது. சுவாமிக்கு, பூ மூடல் எனும் பூஜை நடந்த்து. அதில், பல்வேறு வகையான பூக்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்து வருகின்றனர். நேற்று காலை, 6:00 முதல் மாலை, 6 00 மணி வரை அகண்ட நாம ஜபம் நடந்தது. ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. மதியம் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில், முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.