ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் மகாதேவ அஷ்டமி விழா
ADDED :693 days ago
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ அஷ்டமி எனப்படும் மகாதேவ அஷ்டமி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் மகாதேவ அஷ்டமி விழாவை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அஷ்டமி பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு பைரவ யாகம் வேள்வி பூஜைகள் மற்றும் 16 வகையான பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம், மலர்கிரீடம், மலர்க்குடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் நடந்தது விழாவில் இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜேந்திர சோழீஸ்வரர் பைரவர் கமிட்டியினர் செய்திருந்தனர்.