78 ஆயிரம் வெற்றிலையால் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு அலங்காரம்
ADDED :662 days ago
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், காமராஜ் நகர் பகுதியில் 11 அடி உயர விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதையடுத்து இன்று (12ம் தேதி) கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, மூலவரான 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 78 ஆயிரம் வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. மேலும், உற்சவர் ராமர், லட்சுமனர், சீதை, அனுமருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராமன், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.