/
கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் நாள் இரவு உற்சவம்; கோவிந்தா கோஷத்துடன் ரெங்கனை வழிபட்ட பக்தர்கள்
ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் நாள் இரவு உற்சவம்; கோவிந்தா கோஷத்துடன் ரெங்கனை வழிபட்ட பக்தர்கள்
ADDED :665 days ago
திருச்சி; 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், பகல் பத்து இரண்டாம் திருநாளான இன்று காலை நம் பெருமாள், திருநாரணன் முடி (அ) முத்தரசன் கொரடு, சிகப்பு கல் அபய ஹஸ்தம், மகர கர்ண பத்திரம், அண்டபேரண்ட பக்ஷி பதக்கம், வெள்ளைக்கல் ரங்கூன் அட்டிகை, வெள்ளைக்கல் சின்ன வில்வ பத்திரபதக்கம், நெல்லிக்காய் மாலை,காசு மால அடுக்கு பதக்கங்கள், புஜ கீர்த்தி, சிகப்புக்கல் தாமரை பதக்கம், வெண்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து நடைபெற்ற இரவு உற்சவத்தில் நடைபெற்ற புறப்பாடில் கோவிந்தா கோஷத்துடன் ரெங்கனை பக்தர்கள் வழிபட்டனர்.