உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதியில் பிரகலாதர் சிலை பிரதிஷ்டை

சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதியில் பிரகலாதர் சிலை பிரதிஷ்டை

சிறுமுகை அடுத்த ரங்கம்பாளையம் ஸ்ரீ யோகவல்லி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதியில் பிரகலாதர் உற்சவர் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக அதிகாலையில் மூலவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ராம பக்த ஆஞ்சநேயர், பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து விஷ்வக்ஷேனர் ஆராதனை, புண்ணியா வசனம் ,கலச ஆவாஹனம் , வேத பாராயணம் ஆகியவை தொடர்ந்து மகா சுதர்சன ஹோமம், நவ நரசிம்மர், மிருத்ஜிய, மூல நட்சத்திரம் உள்ளிட்ட 27 ஹோமங்கள் நடந்தது. மேலும் ஸ்ரீ யோகவல்லி தாயாருக்கு திருமாங்கல்யம், லட்சுமி நரசிம்மருக்கு வெள்ளி பூணூல் ஆகியவை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஷ்டோத்திரம் சான்றுமறை அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு மகா அன்னதானம் நடந்தது. பூஜை வைபவத்தை வெங்கடேஷ் பிரசாத் தலைமையில், முத்துகிருஷ்ண பீஷ்மர், நிஜந்தன் ஆகியோர் மேற்கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியின் சார்பில் கிருஷ்ணன், மற்றும் வைஜெயந்தி ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !