சபரிமலை பக்தர்கள் கவனமாக செல்ல வலியுறுத்தும் டிஜிட்டல் போர்டு
கம்பம்; சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தும் வாசகங்கள் நிமிடத்திற்கு ஒருமுறை மாறும் வகையில், கம்பமெட்டு திருப்பத்தில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது
சபரிமலை சீசன் துவங்கியதில் இருந்தே வாகனங்கள் அதிகமாக வரத் துவங்கி விட்டது. எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஒருவழிப்பாதையை முன்கூட்டியே அமல்படுத்தியது. ஆரம்பத்தில் வாகனங்கள் குமுளி வழியாக செல்வதையும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். ஆனால் கடந்த ஒருவாரமாக கடும்போக்குவரத்து நெருக்கடி குமுளி மலை ரோட்டில் ஏற்பட்டதால், போலீசார் ஒருவழிப்பாதையை கண்டிப்புடன் அமல்படுத்த துவங்கினர். கம்பமெட்டு ரோடு விலக்கில் வாகனங்களை பிரித்து அனுப்பும் இடத்தில், சபரிமலை பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர டிப்ஸ் வழங்கும் வாசகங்கள் இரவில் டிஜிட்டல் போர்டில் நிமிடத்திற்கு ஒருமுறை காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த டிஜிட்டல் சைன் போர்டு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கவனமாக வாகனத்தை இயக்க உதவுகிறது.