உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டை ஆதிகேசவபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

உளுந்தூர்பேட்டை ஆதிகேசவபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன.

உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் மார்கழி மாதம் முதல் நாளான இன்று காலை 4.30 மணி அளவில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு பூஜைகளும், தீபாரதனை வழிபாடுகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து கோமாதாவுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !