/
கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் மார்கழி 2ம் நாள் விழா; பாற்கடல் துயின்ற பரமன்கோலத்தில் ரங்கநாதர் சேவை
ஸ்ரீரங்கம் மார்கழி 2ம் நாள் விழா; பாற்கடல் துயின்ற பரமன்கோலத்தில் ரங்கநாதர் சேவை
ADDED :674 days ago
திருச்சி; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள, பரமபத நாதர் சன்னிதியில் மார்கழி மாதம் இரண்டாம் நாளான இன்று, ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், பாற்கடல் துயின்ற பரமன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவம் 18ம் தேதி ஆறாம் நாளில் நம்பெருமாள், தொப்பாரை கொண்டை, புஜ கீர்த்தி, ரத்தின லட்சுமி பதக்கம், வைர அபய ஹஸ்தம், உள்ளிட்ட திருஆபரணங்கள் தரித்து, ஆழ்வார்களுடன், அர்ஜுன மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.