இன்று நந்த சப்தமி; பசுவை வழிபட பாவம் நீங்கும்.. புண்ணியம் சேரும்..!
ADDED :679 days ago
கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் முக்கோடி தேவர்களும் தெய்வங்களும் வாசம் செய்கின்றனர். பசுவை வலம் வந்து துதித்தால் பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டும். பசுவிற்கு புல்லும், வாழைப்பழமும் அளித்தால் யாகம் செய்த பலன்கள் கிட்டும். மார்கழி செவ்வாய்க்கிழமையான இன்று முருகனை வழிபட நல்லதே நடக்கும்.