உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் சேவை ரத்து

பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் சேவை ரத்து

வேலுார்; பள்ளிக்கொண்டா ரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடப்பதால், மார்கழி மாத சொர்க்கவாசல் திறப்பு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலுார் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில்,  அறநிலையத்துறைக்கு சொந்தமான, 1,500 ஆண்டு பழமையான ரங்கநாயகி உடனுறை ரங்கநாதர் கோவில் உள்ளது. கடந்த, 2011, பிப்.,23ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, பாலாலயம் செய்யப்பட்டுள்லது. 2.50 கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணி, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, குளம் சீரமைப்பு பணியும் நடக்கிறது. இதனால் நடப்பாண்டு மார்கழி மாத சொர்க்கவாசல் சேவை ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !