வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :728 days ago
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் பொன்ஆபரண தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் 53ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. இவ்விழாவிற்காக பால்கேணி மேட்டில் இருந்து 27 சைவ, வைணவ கோயில் புனித தீர்த்தங்கள் ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 100 சங்கு, தேங்காய், எலுமிச்சை, தீர்த்தம், 18 படி, கோ, யாக வேள்வி பூஜைகள், சிறப்பு பஜனை, அபிஷேகம் நடந்தது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். விழா ஏற்பாட்டினை ஐயப்ப குருசாமிகள் காமராஜ், ராமதாஸ், நந்தக்குமார் உள்ளிட்ட ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.