உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி; தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை

கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி; தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை

காரைக்கால்; காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியுடன் பிராத்தனை நடந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மாதாக்கோவில் வீதியில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் நேற்று இரவு சிறப்பு திருப்பலி பிராத்தனை நடந்தது.அதைத் தொடர்ந்து நள்ளிரவு தேவாலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி தத்துருபமாக காண்பிக்கப்பட்டது.பின் இடிமின்னல் முழுங்க ஆலய பங்கு தந்தை பீட்டர் ஹென்றி ஜோஷ்வா தலைமையில் குழந்தை ஏசு கிறிஸ்துவின் சொரூபத்தை ஏந்தி வந்து குடிலில் வைத்தார்.அப்போது சிறப்பு திருப்பலியும் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் காமராஜர் சாலையில் உள்ள அந்தோணியர் ஆலயம், தருமபுரத்தில் உள்ள செபாஸ்தியர் ஆலயம்,கோட்டுச்சேரி, குரும்பகரம், நல்லத்தூர்,அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிராத்தனை மற்றும் திருப்பலிகள் நடந்தது.இதில் சீனியர் எஸ்.பி.,மணீஷ், சோழசிங்கராயர் உள்ளிட்ட ஏராளமாக கிறிஸ்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !