பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :666 days ago
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மேளம், தாளம் இசைக்க சுவாமி அம்பாளுக்கு தாலி கட்டும் வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மொய் எழுதினர்.