தொடர் விடுமுறை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :726 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக இரண்டாவது நாளாக இன்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். கோவிலில், அம்மணி அம்மன் கோபுர வீதியில் அமைக்க்ப்பட்ட சிறப்பு பந்தலில் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலப் பாதை வனப்பகுதியில் உள்ள மான்களைக் கண்டு கிரிவலம் செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.