ராமநாதபுரத்தில் இருந்து ரெகுநாதபுரத்திற்கு பாதயாத்திரையாக நெய் குட ஊர்வலம்
ADDED :663 days ago
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நடக்கவுள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்காக பல வருடங்களாக ராமநாதபுரத்தில் இருந்து நேர்த்திக்கடன் விரதம் இருந்து பாதயாத்திரையாக ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் ரெகுநாதபுரம் சென்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்த பிறகு நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நெய் எடுத்துக்கொண்டு நேற்று காலை 6:30 மணியளவில் பாதயாத்திரையாக ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலுக்கு காலை 10:30 மணியளவில் வந்து அடைந்தனர். ஐயப்ப சரணகோஷம் முழங்க பஜனை பாடல்கள் பாடியவாறு நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றனர். ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன் வரவேற்றார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.