/
கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ; நடராஜரின் நடனம் காண பக்தர்கள் குவிந்தனர்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ; நடராஜரின் நடனம் காண பக்தர்கள் குவிந்தனர்
ADDED :728 days ago
கடலூர்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வா வா நடராஜா வந்துவிடு நடராஜா என்ற கோஷத்துடன் தேர் இழுத்து வந்தனர். விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் திருவாபரண அலங்காரம் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடும் ஆருத்ரா தரிசன காட்சி நடைபெறுகிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.