/
கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்; குவிந்த பக்தர்கள்.. மரகத நடராஜரை மனமுருகி பக்தர்கள் வழிபாடு
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்; குவிந்த பக்தர்கள்.. மரகத நடராஜரை மனமுருகி பக்தர்கள் வழிபாடு
ADDED :672 days ago
ராமநாதபுரம் ; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச., 18 அன்று மாலை காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இக்கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்றதாகும். ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று டிச.,26 காலை 8:00 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தன காப்பு படி களைதல் நடந்தது. தொடர்ந்து இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. விடிய விடிய நடைபெற்ற வழிபாட்டில் பச்சை மரகத நடராஜரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். மரகத நடராஜரை மனமுருகி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.